ராணுவத்தில் தற்காலிகப் பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எந்த மாநிலங்களில் இருந்து ராணுவத்தில் அதிக அளவில் வீரர்கள் சேருகின்றனர் என்பதை பார்க்கலாம்.
உலகின் பலம் வாய்ந்த ராணுவ வல்லரசுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக
நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை 21 லட்சத்து 85 ஆயிரம் பேரைக் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக 14 லட்சத்து 55 ஆயிரம் வீரர்களைக் கொண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பைப் பொருத்தவரை கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்கள், 2020-ல் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 12 ஆம் இடத்தில் உள்ளது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்.. பாதுகாப்பு வளையத்தில் ரயில் நிலையங்கள்
முதலிடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 2016 முதல் 2019 வரையிலான 3 ஆண்டுகளில் 18 ஆயிரத்து 906 பேரும், அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் சண்டிகர் பிராந்தியத்தில் இருந்து 15 ஆயிரத்து 455 பேரும், ராஜஸ்தானைச் சேர்ந்த 13 ஆயிரத்து 128 பேரும் ராணுவ பணியில் சேர்ந்தனர்.
இதுபோல் 5-வது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் இருந்து அந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 866 பேரும், 8-ம் இடத்தில் உள்ள பிகாரில் இருந்து 7 ஆயிரத்து 857 பேரும் சேர்ந்துள்ளனர். தேசிய அளவில் 12 ஆம் இடத்திலும் தென்மாநிலங்களில் முதலாமிடத்திலும் உள்ள தமிழகத்தைப் பொருத்தவரை 3 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 300 பேர் ராணுவத்தில் இணைந்தனர், தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகா-லட்சத்தீவு பிராந்தியத்தில் 4267 பேரும், ஆந்திராவில் 4ஆயிரத்து 121 பேரும் ராணுவத்தில் சேர்ந்தனர்.
மேலும் கேரளாவில் இருந்து 3 ஆயிரத்து 727 பேர், 2016 முதல் 2019 வரையிலான 3 ஆண்டுகளில் ராணுவத்தில் சேர்ந்தனர். தெலங்கானாவில் இருந்து ஆயிரத்து 851 பேரும், சத்தீஸ்கரில் இருந்து 1795 பேரும் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக மிசோரம் மாநிலத்தில் இருந்து 492 பேரும் சேர்ந்துள்ளனர்,
அக்னிபத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்திய ராணுவ வீரர்களின் தற்போதைய சராசரி வயது 32 -ல் இருந்து அடுத்த 8 ஆண்டுகளில் 26 ஆக குறைந்து, ராணுவம் இளமைத்துடிப்புடன் மிடுக்கு பெறும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு (2016-19) மாநில வாரியாக....
உத்தரப்பிரதேசம் |
- 18,906 |
பஞ்சாப்&சண்டிகர் |
- 15, 455 |
ராஜஸ்தான் |
- 13128 |
மகாராஷ்டிரா |
- 11866 |
பிகார் |
- 7857 |
தமிழகம்- புதுவை+ அந்தமான் |
- 5300 |
கர்நாடகா + லட்சத்தீவு |
- 4267 |
ஆந்திரா |
- 4121 |
கேரளா |
- 3727 |
தெலங்கானா |
- 185 1 |
சத்தீஸ்கர் |
- 1795 |
மிசோரம் |
- 492 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.