முகப்பு /செய்தி /இந்தியா / ஆன்லைன் சூதாட்ட தடை சட்டங்கள்.. மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - முழு விவரம்..!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டங்கள்.. மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - முழு விவரம்..!

மற்ற மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள்

மற்ற மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளன என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கிமில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை சட்டம், 2008 இன் கீழ் பிளாக் ஜாக் போன்ற கேம்களை வழங்கும் டிஜிட்டல் கேசினோக்கள் ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. ஆபரேட்டர்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் பெற வேண்டும் மற்றும் இன்ட்ராநெட் டெர்மினல்களில் கேம்களை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிக்கிம் இன்ட்ராநெட் டெர்மினல்கள் மூலம் விளையாட்டு பந்தயங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.

மேகலயாவில், மேகாலயா கேமிங் சட்டம், 2021-ன் கீழ் டிஜிட்டல் கேசினோவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நாகாலாந்து சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் கேம்ஸ் ஆஃப் ஸ்கில் சட்டத்தை மேம்படுத்துதல் சட்டம், 2016, மூலமாக அம்மாநிலத்தில் போக்கர் விளையாட்டை "திறன் விளையாட்டு" என ஒழுங்குபடுத்துகிறது.

2017- ஆம் ஆண்டில், தெலங்கானா கேமிங் சட்டத்தின் திருத்தத்தின் மூலம் அனைத்து வகையான ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தையும்  தடை செய்தது. மேலும் கர்நாடகா அரசு 2021 ஆம் ஆண்டில் கர்நாடகா போலீஸ் சட்டம், 1963ஐ திருத்தி அனைத்து ஆன்லைன் கேம்களையும் தடை செய்தது. இருப்பினும், இது பிப்ரவரி 2022 இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

திறன் விளையாட்டுகள் உட்பட அனைத்து ஆன்லைன் கேம்களையும் தடை செய்யும் இதே போன்ற சட்டங்கள் கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஆன்லைனில் விளையாடப்படும் பேஃன்டஸ்சி ஸ்போர்ட்ஸ் எனப்படும் கிரிக்கெட், கால்பந்து ஆகியவற்றை முறைப்படுத்த நாகாலந்தும் மேகாலயாவும் சட்டங்களை கொண்டு வந்துள்ளன.

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் அசாம் ஆகியவை பேஃன்டஸ்சி ஸ்போர்ட்ஸ்களை முற்றிலும் தடைசெய்துள்ளன.

First published:

Tags: Addicted to Online Game, Online rummy