ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநிலங்கள் உதாசினப்படுத்தி விட்டன- மத்திய அரசு குற்றச்சாட்டு

நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநிலங்கள் உதாசினப்படுத்தி விட்டன- மத்திய அரசு குற்றச்சாட்டு

மின் பாதிப்பு

மின் பாதிப்பு

மாநிலங்களுக்கான நிலக்கரி விநியோகம் சீராக நடைபெறுவதால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்து வரும் மத்திய அரசு, நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநிலங்கள் ஊதாசினப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி வருகிறது.

  இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் சீரான நிலக்கரி விநியோகத்தை பெறும் என உறுதியளித்தார். சில சுரங்கங்கள் மூடப்பட்டதாலும், மழையாலும் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டதாக ஜோஷி தெரிவித்தார்

  மின், நிலக்கரி மற்றும் ரயில்வேத் துறை அதிகாரிகள் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை கண்காணித்து வருகின்றனர். அனல் மின் நிலையங்களுக்கு அன்றாட நிலக்கரி தேவை 1 புள்ளி 87 மில்லியன் டன்னாக இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக 2 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியுடன் 10 சதவிகித இறக்குமதி நிலக்கரியையும் சேர்த்து பயன்படுத்த அனல் மின் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கொரோனாவுக்கு பிறகு இயல்பு நிலை தற்போது மெல்ல திரும்பி வரும் நிலையில், மின் விநியோகம் தடைப்பட்டால், தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Coal, Coal importing