ஹோம் /நியூஸ் /இந்தியா /

கணவன் இல்லை..2 பிள்ளைகள்.. உத்திரப்பிரதேசத்தில் முதல் பெண் பஸ் ஓட்டுநரான பிரியங்கா ஷர்மா கதை..!

கணவன் இல்லை..2 பிள்ளைகள்.. உத்திரப்பிரதேசத்தில் முதல் பெண் பஸ் ஓட்டுநரான பிரியங்கா ஷர்மா கதை..!

பிரியங்கா சர்மா

பிரியங்கா சர்மா

ஆரம்பத்தில் எனக்கு ஒரு தொழிற்சாலையில் உதவியாளராக வேலை கிடைத்தது. ஆனால் பின்னர், ஐஆர்சிடிசியின் ஆட்சேர்ப்புத் திட்டத்தைப் பற்றி அறிந்த பிறகு அதற்கு விண்ணப்பித்து ஓட்டுநராக பயிற்சி பெற்றேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நம் ஊர்களில் பஸ், ஆட்டோ ஓட்டும் பெண்களை பார்த்து கொஞ்சம் பழகிவிட்டோம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இப்போது தான் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் சேர்ந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக ஓட்டுநர் ஆனா பிரியங்கா ஷர்மா பற்றி தான் பார்க்க போகிறோம்.

எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்யலாம் என்று காலம் மாறி வருகிறது. ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என்று எந்த வேலையும் பிரிக்கப்படுவதில்லை. அப்படித்தான் இப்போது பஸ்  ஓட்டும் வேலையும் மாறியுள்ளது. பெண்களால் அதையும் செவ்வனே செய்ய முடியும் என்று காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் (UPSRTC) பணியமர்த்தப்பட்ட 26 பெண் ஓட்டுநர்களில் பிரியங்கா ஷர்மாவும் ஒருவர். உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பேருந்தை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கொரோனா பயம்! 3 ஆண்டுகள் வீட்டு அறையை விட்டு வெளிய வராத பெண்கள்..போலீஸ் உதவியுடன் மீட்பு

தனது போராட்டங்கள் குறித்து ANI இடம் பேசிய பிரியங்கா, அதிகப்படியான குடிப்பழக்கத்தால் தனது கணவர் சிறுநீரகம் செயலிழந்து  இறந்துவிட்டார். அதன்பின் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் முழு பொறுப்பும் தன் மீது விழுந்ததாக கூறினார்.

"கணவர் இறந்த பிறகு, என் குழந்தைகளை வளர்க்க வேலை தேடி டெல்லிக்கு வந்தேன். ஆரம்பத்தில் எனக்கு ஒரு தொழிற்சாலையில் உதவியாளராக வேலை கிடைத்தது. ஆனால் பின்னர், ஐஆர்சிடிசியின் ஆட்சேர்ப்புத் திட்டத்தைப் பற்றி அறிந்த பிறகு அதற்கு விண்ணப்பித்து ஓட்டுநராக பயிற்சி பெற்றேன்.

ஓட்டுநர் பயிற்சி முடித்த பிறகு, மும்பைக்கு குடிபெயர்ந்தேன். அடுத்தடுத்து வங்காளம், அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வண்டி ஓட்டினேன் என்றார். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வண்டி ஓட்டி என் பிழைகளை வளர்த்து வந்தேன். அதன் பிறகு இறுதியாக உத்ர பிரதேசத்துக்கு வந்து அரசு பணியில் சேர்த்துள்ளேன்" என்றார்.

மேலும் பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பிரியங்கா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் 2020 இல்அரசு போக்குவரத்துக்கு கழகத்தில் ஓட்டுனராக சேர  விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து, மே மாதம் தனது பயிற்சியில் தேர்ச்சி பெற்று செப்டம்பரில் பணியமர்த்தப்பட்டார். இப்போது உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

First published:

Tags: Motivational Story, Uttar pradesh, Women achievers