• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் - அமைச்சர் ஹர்தீப்சிங் புரி

பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் - அமைச்சர் ஹர்தீப்சிங் புரி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Share this:
    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது, மருந்து பொருட்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, அதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியாது என்றார்.

    இந்நிலையில், பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, கொல்கத்தா சென்றார். அப்போது பேட்டியளித்த அவர், பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் விரும்பாததால்தான் அதன் விலை குறையவில்லை.

    பெட்ரோல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் மட்டுமே மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19 டாலராக இருந்தபோதும், ரூ.32 வசூலித்தோம். பீப்பாய்க்கு 75 டாலராக உயர்ந்த பிறகும் அதே ரூ.32 மட்டுமே வசூலிக்கிறோம். இந்த 32 ரூபாயில்தான் இலவச ரேஷன் பொருட்கள், இலவச வீடு, இலவச சமையல் கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

    இதனிடையே, தமிழக நிதியமைச்சர் படிஆர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்து கூறும்போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் மத்திய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயையும் மத்திய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?

    நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. எனவே, நிலமை மாறியுள்ளதால் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால், கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: