ஹோம் /நியூஸ் /இந்தியா /

இனி மாஸ்க் கட்டாயம்... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

இனி மாஸ்க் கட்டாயம்... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

மாஸ்க் கட்டாயம்

மாஸ்க் கட்டாயம்

இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

பி.எஃப் 7 (BF 7) ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மாஸ்க் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பி.எஃப் 7 (BF 7) ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா விமான நிலையங்களில், சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை கோவிட் பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து மக்களவை பேசிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, பி.எஃப் 7 (BF 7) ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள தொடங்கிவிட்டதாகவும் இந்த பெருந்தொற்றை சமாளிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

First published:

Tags: Corona, Corona Mask, Covid-19, Omicron