11 மாநிலங்களில் இரண்டில் வெற்றி... நான்கில் ஆட்சி பறிபோனது...! மாநிலங்களில் சரிகிறதா பாஜக செல்வாக்கு...?

11 மாநிலங்களில் இரண்டில் வெற்றி... நான்கில் ஆட்சி பறிபோனது...! மாநிலங்களில் சரிகிறதா பாஜக செல்வாக்கு...?
அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: February 13, 2020, 9:44 AM IST
  • Share this:
நாடு முழுவதும் அண்மையில் 11 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், 2 மாநிலங்களில் மட்டுமே பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. 4 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்ததுடன், மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது.

மக்களவை தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றியை பெற்று சரித்திர சாதனையை நிகழ்த்தினாலும், சட்டப்பேரவை தேர்தல்களில் அக்கட்சியால் ஒளிர முடியாத நிலையே தொடர்கிறது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. 2019-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்ற சிக்கிம், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில், முந்தைய ஆட்சி பாஜகவினுடையது அல்ல என்ற போதிலும், அக்கட்சி தோல்வியையே தழுவியது.


ஆனால் அதே 2019 மே மாதம் நடைபெற்ற அருணாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், சிவசேனா முதலமைச்சர் பதவி கோரியதால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது.

2019 அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்ற ஹரியானாவில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியால் ஆட்சியை தக்க வைத்தது. 2019 டிசம்பரில் நடைபெற்ற ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில், தோல்வியடைந்து ஆட்சியை விட்டு வெளியேறியது.

இந்த வரிசையில் தற்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. 1993-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading