புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் ஜனவரி 16- ஆம் நாள் தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 150 ஸ்டார்ட் அப் நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மக்களின் ஆற்றலை தேசம் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறி உள்ளதாகவும், 100 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்கள், சர்வதேச அளவில் தேசத்தை மிளிர செய்வதாகவும் மோடி குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப்-களின் கலாசாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் பரவ ஜனவரி 16- ஆம் நாள், ஸ்டார்ட் அப் தினமாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும் படிக்க: பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக அளவில் தொடங்கும் வகையில் அரசின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் தொழில் தொடங்க வலியுறுத்திய மோடி, இப்பகுதிகள் தற்போது ஏற்றம் கண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த தசாப்தம் இந்தியாவின் ‘டெக்கேட்’ என்று அழைக்கப்படுவதாக தெரிவித்த மோடி, புதுமை, தொழில்முனைவு மற்றும் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த, தொழில்முனைவோருக்கு தாராளமய கொள்கைளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது கனவுகளை உள்ளூர் அளவில் அல்லாமல் உலக அளவில் காண வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, கனவுகள் நிறைவேற அரசாங்கங்கள் துணை புரியும் என உறுதியளித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள 625 மாவட்டங்களின் சிறு நகரங்களில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமேனும் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் சிறு நகர மக்கள் தங்களது யோசனைகளை வணிகமாக மாற்றி வருவதை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.
கடந்த ஆண்டு இந்தியாவில், யுனிகார்ன் எனப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 42 ஸ்டார் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்ட மோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
Also read: ஓடும் பேருந்தில் மாரடைப்பு: உயிருக்கு போராடிய இளைஞரை முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Modi