பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்ற இளைஞன்... ஜாமினில் வெளிவந்து பெண்ணை கொலை செய்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்ற இளைஞன்... ஜாமினில் வெளிவந்து பெண்ணை கொலை செய்த கொடூரம்
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 3:45 PM IST
  • Share this:
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்றவன், ஜாமினில் வெளிவந்து, சிறுமியை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, தமிழகம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என்று பல மாநிலங்களில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தன.

நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. பாலியல் குற்றவாளிகளை அடித்துக்கொல்ல வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்குவது ஆபத்தாக மாறும் வகையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவகுமார் என்பவர் கைதானார். கடந்த 10 நாட்களுக்கு ஜாமினில் வெளிவந்த அவர், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த பெண் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், பெண்ணின் நடவடிக்கையை தினமும் கண்காணித்த சிவக்குமார், பெண்ணின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்குள் சென்ற அவன், பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளான். அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கே வர, அங்கிருந்து சிவக்குமார் தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.

எனினும், கத்தியுடன் இருந்தவனை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமினில் வழங்குவது கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Loading...

30 முறை பெண்ணை சிவக்குமார் கத்தியால் குத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...