உத்தவ் தாக்கரே நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின்! ஆப்சென்ட் ஆன மம்தா, கெஜ்ரிவால்

உத்தவ் தாக்கரே நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின்! ஆப்சென்ட் ஆன மம்தா, கெஜ்ரிவால்
உத்தவ் தாக்கரே நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: November 28, 2019, 6:43 PM IST
  • Share this:
மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கவுள்ளன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார். இன்று மாலையில், 6.40 மணிக்கு மும்பையிலுள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி ஆகியோர் உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவருடன் எம்.பி டி.ஆர்.பாலுவும் பங்கேற்றுள்ளார்.


Also see:First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்