தெலங்கானாவில் சரிந்த பிரச்சார மேடை: நிலைகுலைந்த முன்னாள் நடிகை!

news18
Updated: October 13, 2018, 1:31 PM IST
தெலங்கானாவில் சரிந்த பிரச்சார மேடை: நிலைகுலைந்த முன்னாள் நடிகை!
பிரச்சார மேடையில் விஜய சாந்தி
news18
Updated: October 13, 2018, 1:31 PM IST
தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான விஜய சாந்தி சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மகாபூநகர் மாவட்டத்தில்  நடந்த  தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடையேறிய சில நொடிகளில் மேடை சரிந்து விட நிலைகுலைந்த விஜய சாந்தி கீழே விழுந்து விட்டார்.

தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அங்குள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக நட்சத்திர பிரமுகர் விஜய சாந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மகாபு நகர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய சாந்தி மேடையேறி பேசிய சில நொடிகளில் மேடை சரிந்து விழுந்தது. விஜய சாந்தி, மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பிராச்சார கமிட்டியின் தலைவரான மல்லு பஹட்டி விக்ரமர்கா மற்றும் பலரும் கீழே விழுந்தனர். நல்வாய்ப்பாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் அடிபடவில்லை. உடனடியாக அங்கிருந்த கட்சியினர் கீழே விழுந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
Loading...கட்சி பொதுக் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்பார்த்ததை விட அதிகளவில் கூட்டம் வந்ததால் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...