FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன
FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன
Fastag - Factcheck
Fastag - Factcheck | ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு கருவிகள் மூலம் ஸ்கேனிங் செய்து ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது போன்ற வீடியோ ஒன்று சமீப காலமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஃபாஸ்டேக் ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளை இத்தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகள் பணம் செலுத்தி வாகனங்கள் செல்லும்போது நீண்ட நேரம் ஆவதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மேலும் பணப்பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் பரவலாக பேசப்படும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஃபாஸ்டேக் (FASTAG) முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தற்போது நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் மூலம் எளிதாகவும் விரைவாகவும் சுங்கக்கட்டணம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு கருவிகள் மூலம் ஸ்கேனிங் செய்து ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது போன்ற வீடியோ ஒன்று சமீக காலமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், காரின் முன்பக்க கண்ணாடியை சுத்தம் செய்யும் சிறுவன் தனது கையில் அணிந்திருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஃபாஸ்ட்டேக் பகுதியைத் துடைக்கும்போது சிவப்பு நிறத்தில் ஸ்கேன் ஆகிறது. மறுகணமே அந்த சிறுவன் புறப்படத் தயாராவது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பேடிஎம் நிறுவனம், தனது ஃபாஸ்டேக்கை இப்படி ஹேக் செய்ய முடியாது என்று தெளிவுப்படுத்தி இருந்தது.
A video is spreading misinformation about Paytm FASTag that incorrectly shows a smartwatch scanning FASTag. As per NETC guidelines, FASTag payments can be initiated only by authorised merchants, onboarded after multiple rounds of testing. Paytm FASTag is completely safe & secure. pic.twitter.com/BmXhq07HrS
இந்நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டில், ‘சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற மற்றும் தவறான வீடியோக்கள் பரவி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். பின்வரும் புள்ளிகளைப் புரிந்து கொள்ளுங்கள்:
Please note that there are baseless and false videos circulating on Social media. Do understand the below points:
1. திறந்த இணைய இணைப்பு மூலம் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது.
2.அனைத்து முன்நிபந்தனைகளும் இல்லாமல் எந்த நிதி பரிவர்த்தனைகளையும் தொடங்க முடியாது.
இந்த வீடியோக்களுக்கு பதிலளிக்கவும், சமூக ஊடக தளங்களில் இருந்து அவற்றை நீக்கவும் NPCI ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளத’ என தெளிவுப்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.