மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி! சோமேட்டோவுக்கு எதிராக குரல் எழுப்பும் ஊழியர்கள்

இஸ்லாமியருக்கு பன்றிக் கறியை கொண்டு சென்று கொடுப்பதில் தயக்கம் உள்ளது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாட்டுக்கறியைக் கொண்டு சென்று கொடுப்பதில் தயக்கம் உள்ளது.

news18
Updated: August 11, 2019, 6:56 PM IST
மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி! சோமேட்டோவுக்கு எதிராக குரல் எழுப்பும் ஊழியர்கள்
அதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரே ஆர்டராக 415 பெட்டிகளில் உணவை பேக் செய்து கப்பலில் பிரம்மபுத்ரா ஆற்றைக் கடந்து சென்று டெலிவரி செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த ஒற்றை ஆர்டருக்கான கட்டணமாக 1,54,760 ரூபாயை ஜொமாட்டோ வசூலித்துள்ளது.
news18
Updated: August 11, 2019, 6:56 PM IST
கொல்கத்தாவில் பன்றி கறி மற்றும் மாட்டுக் கறி டெலிவரி செய்யச் சொல்வதற்கு எதிராக சோமேட்டோ ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்து மதத்தைச் சாராதவரும் கொண்டுவரும் உணவை வாங்க மாட்டேன் என்று சோமேட்டோ நிறுவனத்தை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சோமேட்டோ, உணவுக்கு மதமில்லை. உணவே ஒரு மதம்தான் என்று பதிலளித்திருந்தது.

சோமேட்டோவின் பதிவுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துகள் வந்தன. இந்தநிலையில், சோமேட்டோ நிறுவனத்துக்கு வேறு ஒரு பிரச்னை எழுந்துள்ளது. பன்றி கறி மற்றும் மாட்டுக்கறி டெலிவரி செய்யச் சொல்வதற்கு எதிராக ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த ஊழியர்கள், ’இங்கே நாங்கள் இந்து மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்கிறோம். எங்களுக்குள் இணைந்து பணி செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இஸ்லாமியருக்கு பன்றிக் கறியை கொண்டு சென்று கொடுப்பதில் தயக்கம் உள்ளது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாட்டுக்கறியைக் கொண்டு சென்று கொடுப்பதில் தயக்கம் உள்ளது.

ஆனால், எங்களுக்கு ஒரு விதிக்கப்படும் பணியை நாங்கள் மீற முடியவில்லை. இதுதொடர்பாக நாங்கள் மேலதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம். ஆனால், எந்தப் பதிலும் இல்லை. அதனால், திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜீப் பானர்ஜி, ‘சோமேட்டோ ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.

Also see:

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...