புதுச்சேரி கலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் விநியோகித்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணை

Youtube Video

முதற்கட்ட விசாரணையில், குடிநீர் பாட்டில் கொடுத்த ஊழியர், கிருமிநாசினியால் கையை சுத்தம் செய்ததால் வாசனை வந்துள்ளதும், அதில் பெயின்ட் தின்னர் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது

 • Share this:
  புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

  புதுச்சேரி ஆட்சியராக பதவி வகித்து வந்த டாக்டர். அருண் கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட நிலையில், அப்பொறுப்பிற்கு சுற்றுலா துறை செயலாளரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா கார்க் நியமிக்கப்பட்டார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு தினங்களுக்கு முன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபோது,

  அபூர்வா கார்க்கிற்கு வழங்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில், நச்சுத்தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் புகார் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தனது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  முதற்கட்ட விசாரணையில், குடிநீர் பாட்டில் கொடுத்த ஊழியர், கிருமிநாசினியால் கையை சுத்தம் செய்ததால் வாசனை வந்துள்ளதும், அதில் பெயின்ட் தின்னர் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. திரவம் கலந்த குடிநீர் பாட்டில், ஐதராபாத் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  Published by:Yuvaraj V
  First published: