Home /News /national /

பிகினி உடையில் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த பேராசிரியை டிஸ்மிஸ்.. அநீதி என பேராசிரியை புகார்!

பிகினி உடையில் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த பேராசிரியை டிஸ்மிஸ்.. அநீதி என பேராசிரியை புகார்!

இன்ஸ்டா பதிவால் ஆசிரியைக்கு வேலை பறிபோனது

இன்ஸ்டா பதிவால் ஆசிரியைக்கு வேலை பறிபோனது

மாணவர் ஒருவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியையின் பதவி பறிபோனது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kolkata, India
    மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி பேராசிரியை ஒருவர் பிகினி உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காரணத்தால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம், அநீதி என பேராசிரியை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஆக பணிபுரிந்த ஒருவர் தான் பிகினி நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிரம் சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இந்த போட்டோவை கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். இந்த விவரம் மாணவரின் தந்தைக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக மாணவரின் தந்தை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு புகார் கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட பேராசிரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து புகாரை விசாரித்த துணை வேந்தர் பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக ஆசிரியை செயல்பட்டுள்ளதாக கூறி பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த சம்பவம் பத்து மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில்,தனிப்பட்ட முறையில் பேராசிரியை அணிந்திருந்த உடையை காட்டி அவரை பணி நீக்கம் செய்ததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


    பேராசிரியையும் இது தனக்கு நேர்ந்த அவமானம், கொடுமை என வருத்தத்துடன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேராசிரியை தரப்பு கூறுகையில், "கடந்த 10 மாதங்களாக மோசமான நிகழ்வுகளை நான் சந்தித்துவருகிறேன். எனது தனித்தன்மை, உரிமை, கண்ணியத்தை மீட்க நான் போராடி வருகிறேன். நான் தனிப்பட்ட முறையில் சில நபர்கள் பார்க்கும்படி வைத்திருந்த புகைப்படத்தை வைத்து என்னை பணி நீக்கம் செய்துள்ளது எனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். அவமானம், கொடுமை என அனைத்து விதமான மோசமான உணர்வுகளை நான் கடந்து நிற்கிறேன் என வருத்தத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தை பெண் சட்ட ரீதியாக எதிர்கொள்வார்" எனக் கூறப்படுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: College, Instagram

    அடுத்த செய்தி