இலங்கையில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம்! தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கையில் சுதந்திரதின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  இலங்கையில் 72-வது சுதந்திர தின விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தினத்தன்று சிங்களம், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அந்நாட்டு நில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கும்போதும், ஒரே மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படுவதை போன்று இலங்கையிலும் ஒரு மொழியில் மட்டும் இனி தேசிய கீதம் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபட்ச கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறியுள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: