• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் - ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்

அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் - ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மசோதா விளக்குகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நேற்று இரவு குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை குறித்து முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழகர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

     



    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம் சார்ந்தோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மதங்களைச் சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மசோதா விளக்குகிறது.

    மேலும் பார்க்க: ஹெச்1பி விசா விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: