ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நம்பிக்கையுடன் காத்திருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் !

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நம்பிக்கையுடன் காத்திருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் !

இலங்கை தமிழ் அகதிகள்

இலங்கை தமிழ் அகதிகள்

”நாங்கள் விரைவில் இந்தியபிரஜைகளாவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அப்போது எங்கள் குழந்தைகளுக்கும் அரசு வேலை கிடைத்துவிடும்” என்கிறார் இலங்கை தமிழ் அகதி அங்கம்மா.

ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருந்த தோணியில் இருந்த தர்ஷினிக்கு வயது ஐந்து. அவளது அப்பா இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டிருந்தார் என்பதும் அதனால் அவளது தாய் இலங்கையில் இருந்து தப்பித்து செல்ல வழி தேடி அந்த இரவில் பல இடங்களில் ஒளிந்துகொண்டிருந்தாள் என்பது அந்த சிறுமிக்கு தெரிந்திருந்தது.

இது நடந்தது 1990-ம் ஆண்டு.

அம்மாவின் கண்ணீர் துளிகள், அவளது நான்கு வயது தங்கை மற்றும் தோணியில் அவளது பயணம் என அனைத்தும் தர்ஷினிக்கு இன்னமும் நன்றாகவே நினைவில் இருக்கின்றன.

முதலில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தனர். பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு அருகில் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

29 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் தர்ஷினி ஒரு இந்திய குடிமகளாக வேண்டும் என விருப்பப்படுகிறாள்.

“எனக்கு இந்திய குடியுரிமை இல்லை. நான் எனது 5 வயதில் இந்தியாவிற்கு வந்தேன். எனது அம்மா இலங்கையில் இருந்து தப்பி ஓடிவந்த அகதி. நானும் ஒரு அகதி. என் குழந்தையும் கூட ஒரு அகதி. நாங்கள் இங்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

ஒரு அகதியாக நாங்கள் இங்கு வாழந்துவிட முடியும். ஆனால், நாங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாது. ஏனென்றால், நாங்கள் இலங்கையில் இருந்து புறப்பட்ட போது எல்லாவற்றையும் இழந்திருந்தோம். மீண்டும் எங்களால் அங்கு திரும்பிச்செல்லவே முடியாது” என்கிறார் தர்ஷினி.

சென்னையில் இருந்து 50கி.மீ தெலைவில் உள்ள குமிடிப்பூண்டி அகதிகள் மறுவாழ்வு முகாமில் 3,000 இலங்கை தமிழ் அகதிகள் குடியிருக்கிறார்கள். அங்கிருப்பவர்களில் தனியார் நிறுவனங்களிலில் வேலை பார்க்கும் ஒரு சிலரைத்தவிர மற்ற அனைவரும் கூலித்தொழிலாளிகள்.

இந்த முகாமிற்குள் 200க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கும் அகதிகளுக்கான ஒரு பள்ளிக்கூடமும் இருக்கிறது.

“நாங்கள் 1990-ல் இருந்து இங்கு இருக்கிறோம். நான் இந்தியாவில் வாழவே விருப்பப்டுகிறேன். நாங்கள் இலங்கைக்கு திரும்பிச்செல்வது பாதுப்பானது இல்லை. எங்கள் குழந்தைகளெல்லாம் இங்குதான் படிக்கிறார்கள். நாங்கள் இந்த அரசிடம் எங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். அரசு எங்கள் குழந்தைகள் ஒரு நல்ல வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்கிறார் விஜயலெட்சுமி எனும் மற்றுமொரு அகதி.

கும்மிடிப்பூண்டியில் இருக்கும் அகதிகளில் பெரும்பாலான புலம்பெயர்ந்த அகதிகள் தங்களுக்கென்று இலங்கையில் எதுவும் இல்லை என்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச்செல்வது என்பது மீண்டும் தங்கள் வாழ்வை ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது என நினைக்கிறார்கள்.

தமிழக அரசு புலம்பெயர்ந்து இங்கு வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மாதாந்திர ஊங்கத்தோகை வழங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 1,000 ரூபாயும், ஆண்களுக்கு 750 ரூபாயும் குழந்தைகளுக்கு 400 ரூபாயும் கிடைக்கிறது. முகாம்களுக்கு அருகில் இருக்கும் அரசு பள்ளிகளில் குழந்தைகள் படித்துக்கொள்கிறார்கள்.

அவர்களது ஒரே கவலை என்பது, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கை மண்ணில் மீண்டும் அவர்களால் எப்படி புதிய வாழ்கைகயை தொடங்க முடியும் என்பதுதான். தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என இந்த அரசை வேண்டிக்கொள்கிறார்கள். அப்போதுதான் அவர்களின் குழந்தைகள் பெரியவர்களானதும் ஒரு நல்ல வேலைக்கு செல்ல முடியும் என கூறுகிறார்கள்.

“இங்கு குறைவான வேலைவாய்ப்புகள்தான் இருக்கின்றன. நாங்கள் இங்கு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒன்று நாங்கள் இங்கு இருக்க வேண்டும் அல்லது இலங்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.

எனது குடும்பம் கூலி வேலைக்கு செல்கிறது. எனது மகன் பெயின்ட் அடிக்கும் வேலைபார்க்கிறான் எனது கனவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். நாங்கள் விரைவில் இந்தியபிரஜைகளாவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அப்போது எங்கள் குழந்தைகளும்கு அரசு வேலை கிடைத்துவிடும். அல்லது வேறு ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்வார்கள்.” என அங்கம்மா கூறுகிறார்.

ஆவணங்களின்படி தமிழகம் முழுவதும் 65,000 புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் வசிக்கும் 107 மறுவாழ்வு முகாம்கள் இருக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானோர் இந்தியக்குடியுரிமை பெறுவதற்காக தங்களால் இயன்றதை செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் 65 பேர் தங்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிழையில் வழக்குத் தொடர்ந்தார்கள். உயர்நீதிமன்றம் குடியுரிமை வேண்டு புதிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கச்சொல்லிவிட்டது.

நீதிமன்றத்தை அணுகியவர்களில் ஒருவரான அமர்நாத் தனது நான்காவது வயதில் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். மிக விரைவில் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிடும் என நம்புகிறார்.

“நான் எனது வாழ்வை தமிழகத்தில்தான் தொடங்கினேன். நான் இங்குதான் படித்தேன். எனது 32 வருட வாழ்க்கையை இந்திய மண்ணில் தான் வாழ்ந்திருக்கிறேன். நான் நிரந்தரக் குடியுரிமை வேண்டி நீதிமன்றத்தை நாடினேன். நீதிமன்றத்தின் வழிகாட்டதலின்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நிரந்தர குடியுரிமை கோரி படிவம் 6-1ஐ சமர்ப்பித்தேன். மற்ற 64 அகதிகளும்கூட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தார்கள். ஆனால், எங்களுக்கு இருவரை அதிகாரிகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.” என்கிறார் அமர்நாத்.

ரவீந்திரனுக்கு தற்போது 40 வயது. 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தப்பியபோது அவருக்கு வயது 11. இந்தியாவில் 40 வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் ரவீந்திரன் தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பிச்செல்வது குறிச்சு ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார்.

“நானும் எனது குடும்பமும் அகதிகள் முகாமில் வருடக்கணக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நான் இங்குதான் படித்தேன். ஒரு இல்ங்கை தமிழ் பெண்ணை இங்குதான் மணந்துகொண்டேன். எங்களுக்கு இப்போது 2 மகள்கள். ஒருவளுக்கு 12 வயது இன்னொருவளுக்கு 7 வயது. இருவரும் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்துத் வருகிறார்கள்.

ஆனால், இலங்கை திரும்புவதற்கு இதுதான் சரியான தருனம் என நான் நினைக்கிறேன். எனக்கு இங்கு சரியான வேலை இல்லை. இந்த முகாமை விட்டு நான் வெளியேற அனுமதிக்கப்படாததால் என்னால் ஒரு வாடைகைக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்ய முடியாது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இந்த முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியக் குடிமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை எங்களால் பெறமுடிவதில்லை.” என்கிறார் அமர்நாத்.

மேலும் அமர்நாத் கூறுகிறார் “என்னோடு படித்தவர்களெல்லாம் கௌரவமான வேலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இந்திய குடிமக்கள். எனக்கும் அத்தகைய நல்ல வாயப்புகள் வேண்டும்” என்று.

தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கை தமிழ் அகதிகளும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எப்படி நடைமுறைப்படுத்தப்போவதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு வேறு வழி இல்லாததால் அரசு எடுக்கும் முடிவை பின்பற்றியாகவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

- பூர்ணிமா

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Citizenship Amendment Bill, Srilankan Tamil, Tamil Refugees