• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ராவணனின் விமானம் குறித்து ஆய்வு; இந்தியாவும் இணைந்துகொள்ள இலங்கை அழைப்பு

ராவணனின் விமானம் குறித்து ஆய்வு; இந்தியாவும் இணைந்துகொள்ள இலங்கை அழைப்பு

ஆய்வில் இலங்கை அரசு

ஆய்வில் இலங்கை அரசு

ராவணனின் விமானப் போக்குவரத்த ஆய்வை இலங்கை அரசு மீண்டும் தொடங்கவுள்ளது. இந்தியாவுக்கும் அழைப்புவிடுத்துள்ளது.

  • Share this:
    இரண்டு வருடங்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள், வரலாற்றாச்சியர்கள், தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் பங்கேற்ற மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. அதில், அந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான யோசனை பிறந்தது. அந்த மாநாட்டில் ராவணன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளான் என்று முடிவுக்கு வந்தனர்.

    அந்த மாநாட்டுக்குப் பிறகு, இதுதொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு 5 மில்லியன் இலங்கை ரூபாயை முதற்கட்ட நிதியாக அப்போதைய அரசு ஒதுக்கியது. இதுகுறித்த பேசிய இலங்கை விமானப்போக்குவரத்துத்துறையின் முன்னாள் அதிகாரி ஷாஷி தனதுங்கே, ‘கொரோனா ஊரடங்கின் காரணமாக அந்த ஆய்வு அப்போது நிறுத்தப்பட்டது. தற்போதைய ராஜபக்ச தலைமையிலான அரசும் இந்த ஆய்வை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி இதனைத் தொடர்வதற்கு தற்போதைய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டுகள் தொடங்கும் என்று கருதுகிறேன்’ தெரிவித்தார். ஷாஷி வரலாற்றின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். ராவணன் காலத்துக்கு விமான நிலையம் குறித்து ஆய்வு செய்வதற்கு இலங்கை முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார்.

    தொடர்ந்து இதுகுறித்து டனதுங்கே பேசும்போது, ‘ராவணன் புராணக் கால கதாப்பாத்திரம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். அவர் நிஜ அரசன். அவர் உண்மையில் விமானம் மற்றும் விமான நிலையம் வைத்திருந்தார். அது தற்போதைய காலத்து விமானம், விமான நிலையம் போன்றதல்ல. பழங்கால இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் சிறப்பான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்துள்ளனர். இதுதொடர்பாக நாம் சிறப்பான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இருநாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் இந்த ஆய்வில் இந்தியாவும் பங்கற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவைத்துள்ளார். இந்த ஆய்வுக்கு ஆதரவாக ஷாஷி மட்டும் பேசவில்லை. இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் கட்டிடக் கலைஞர் சுனிலா ஜெயவர்த்தனே எழுதிய த லைன் ஆஃப் லங்கா - தீவின் கட்டுக்கதைகள் மற்றும் நினைவுகள் என்ற புத்தகத்தில் ராவணனின் விமானச் சேவை குறித்து எழுதியுள்ளார்.

    இதுகுறித்து தெரிவித்த சுனிலா, ‘தற்போதைய உலகில் ராவணனின் விமானம் என்பது கற்பனையானது. தற்போதுள்ள படித்த இளைஞர்கள் எல்லாருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டில் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நம் மனதில் பதிந்துள்ளது. பண்டைக் கால விமானம் குறித்த எழுத்துகள் மிகவும் விரிவானவையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உள்ளது. ஆனால், அது கட்டுக்கதை என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அவருடைய மாமா இலங்கையின் நவீன விமானி மறைந்த ரே விஜிவர்த்தனேவும் ராவண கால விமானப் போக்குவரத்து என்ற கருதுகோளை நம்புவதாக தெரிவித்தார். சுனிலாவின் கூற்றுப்படி, தொட்டுபொலகந்தா, உசன்கோடா, வீஹீரங்கதோடா, ருமசல்லா, லகீகலா ஆகிய பகுதிகளில் விமானநிலையம் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். ராவணன் மற்றும் அவனுடைய ஆட்சி குறித்து இலங்கையில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ராவணனை பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய பெயரில் செயற்கைக்கோளை ஏவி ராவணனுக்கு பெருமை சேர்த்துள்ளது இலங்கை அரசு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: