இலங்கை சென்றுள்ள இந்தியர்களின் நிலையை அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

news18
Updated: April 21, 2019, 1:40 PM IST
இலங்கை சென்றுள்ள இந்தியர்களின் நிலையை அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
இலங்கை - குண்டு வெடிப்பு
news18
Updated: April 21, 2019, 1:40 PM IST
இலங்கை சென்றுள்ள இந்தியர்களின் நிலையை அறிய தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Loading...
இந்நிலையில் இலங்கை சென்றுள்ள இந்தியர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து தகவல்களை அவர்களது உறவினர்கள் அறிந்துக்கொள்ள, “+94777903082 +94112422788 +94112422789 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம்” என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...