Sputnik V Vaccine: ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும்!

ஸ்புட்னிக் வி தடுப்பூசி

உலகிலேயே கொரோனாவுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட முதல் தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி,

  • Share this:
2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் போட தேவையான தடுப்பூசி உள்நாட்டில் கிடைக்கும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வினோத் குமார் பால் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் முதல் பேட்ச் இந்தியா வந்தடைந்துள்ளது, இந்திய சந்தைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் ரஷ்யாவில் இருந்து மேலும் தடுப்பூசிகள் இந்தியா வந்தடையும் எனவும் வி.கே.பால் தெரிவித்தார்.

தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து பேசிய நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் மொத்தமாக 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் இதற்காக டாக்டர். ரெட்டீஸ் லேப் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வி.கே.பால் கூறினார்.

தொடர்ந்து பேசிய வி.கே.பால், “வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்தற்குள் இந்தியா மற்றும் இந்தியர்களுக்காக 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். அதாவது இந்தியாவின் தேவைக்கும் அதிகமாக, ஒவ்வொரு இந்தியனுக்கும் தடுப்பூசி போட்ட பின்னரும் தடுப்பூசி நம்மிடம் இருக்கும். எனவே இனி தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த பேச்சுக்கே இடமில்லை.

தற்போது நாட்டில் கிடைக்கும் கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் மேலும் 6 கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும். ஆகஸ்ட் தொடங்கி அடுத்த 5 மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.” இவ்வாறு வி.கே.பால் கூறினார்.

Read more:   வாக்கிங் சென்ற போது விபரீதம்: நாய் கடித்துக் குதறியதில் தொழிலாளி பலி - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!


உலகிலேயே கொரோனாவுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட முதல் தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, இவற்றை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது கொரோனாவுக்கு எதிராக 91.6% செயல்திறன் கொண்டதாகும்.

இந்தியாவில் இதுவரை 17,72,14,256 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்தது, இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More:  குடும்பத்தில் 4 பேர் பலி: மொத்த குடும்பத்தையும் கொரோனாவுக்கு பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி நிற்கும் சிறுமிகள்!

இந்தியாவில் நிறுவனவாரியாக தடுப்பூசி தயாரிப்பு தரவுகள்: (மொத்தம் 216 கோடி டோஸ்)

கோவிஷீல்ட் - 75 கோடி டோஸ்
கோவேக்ஸின் - 55 கோடி டோஸ்
Bio E sub unit - 30 கோடி டோஸ்
Zydus Cadila DNA - 5 கோடி டோஸ்
SII Novavax - 20 கோடி டோஸ்
Bharat Biotech intranasal - 10 கோடி டோஸ்
Genova mRNA - 6 கோடி டோஸ்
Sputnik V - 15.6 கோடி டோஸ்
Published by:Arun
First published: