Home /News /national /

இந்தியாவில் ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவும் ஆபத்து - தென்னாப்ரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவும் ஆபத்து - தென்னாப்ரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவும் ஆபத்து -

இந்தியாவில் ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவும் ஆபத்து -

இந்தியாவில் ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவும் ஆபத்து இருப்பதாக, தென்னாப்ரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மும்பை தாராவியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு தொடங்கியது முதல் மகாராஷ்டிராவில்தான் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில் தான்சானியாவில் இருந்து தாராவி வந்த 49 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கடந்த 10ம் தேதி உறுதியானது. மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் சராசரியாக எட்டரை லட்சம் பேர் வசித்து வரும் நிலையில் கடந்த இரு கொரோனா அலைகளால் பாதிப்பு மிக அதிகம் இருந்தது.

    தாராவியில் 80 விழுக்காடு மக்கள் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதால், முதல்கட்டமாக ஒமைக்ரானை கட்டுப்படுத்த கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாராவியில் 18 வயதுக்கும் மேற்பட்டோரில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பதிவாகியுள்ள மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், கேரளா, கர்நாடகம் ஆகியவை தற்போது அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருகின்றன.

    Also Read : ஒமைக்ரான் பாதிப்புக்கு பிரிட்டனில் முதல் பலி... தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

    தடுப்பூசியின் செயல்திறனை ஒமைக்ரான் குறைப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானாலும் தீவிர பாதிப்புகளை கண்டறிய போதிய தரவுகள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவும் என்று தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜூலியா புல்லியம் தெரிவித்துள்ளார்.

    Also Read : கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிளப்பில் ஆட்டம்: மன்னிப்புக் கோரிய பிரதமர்

    இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை உருமாறிய கொரோனாவையும் 20 நிமிடங்களிலேயே கண்டறியும் புதிய molecular diagnostic technology நுட்பத்தை கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது விரைவில் வணிக ரீதியில் கொண்டுவரப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி