ஹோம் /நியூஸ் /இந்தியா /

“விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு இல்லைனு மக்கள் புரிஞ்சுக்கனும்” - பிரதமர் மோடி பேச்சு..!

“விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு இல்லைனு மக்கள் புரிஞ்சுக்கனும்” - பிரதமர் மோடி பேச்சு..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியாவில் விளையாட்டு என்பது பொழுது போக்காக இருந்த காலம் மாறி தற்போது வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக உருவெடுத்துள்ளது என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உச்சம் பெறுவதற்கான சூழல் பன் மடங்கு அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சன் சத் கேல் கும்பமேளா என்ற விளையாட்டு திருவிழாவை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த திருவிழாவில் திறம்பட விளையாடும் உள்ளூர் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறினார். சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் தற்போது சாதனைகளை குவித்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டு என்பது பொழுது போக்காக இருந்த காலம் மாறி தற்போது வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக உருவெடுத்துள்ளது என்றார். மேலும் விளையாட்டு துறையில் இளைஞர்கள் சாதிப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் தற்போது நாட்டில் உள்ளது என்று பிரதமர் கூறினார். வீரர்கள் இலக்குகளை நிர்ணயித்து, புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Employment, PM Modi, Sports