புயலால் தான் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது! - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

news18
Updated: September 14, 2018, 3:15 PM IST
புயலால் தான் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது! - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்
news18
Updated: September 14, 2018, 3:15 PM IST
சூறாவளி, புயல் போன்ற இயற்கை சீற்றத்தினால் உலகச் சந்தையில் கச்ச எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``டெக்ஸாஸில் உருவான சூறாவளி காரணமாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் விரைவில் கச்சா எண்ணெய் விலை விரைவில் குறையும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜி.எஸ்டி மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது. அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். பெட்ரோல் விலையை நிர்ணயிக்க இதுவே சரியான வழி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு


அன்றாடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதுதான்  வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். சர்வதேச சந்தையில் எண்ணெய் நிறுவனங்களால் மட்டுமே விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதில் அரசாங்கம் தலையிடுவதில்லை. பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை.

மோடி தலைமையிலான அரசு, அரசாங்க பணத்தை மீட்டு பொக்கிஷ கஜானாக்களை நிரப்பி வருகிறது’’ என்று பிரதான் கூறினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜித்வாலா எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி மோடி கஜானாக்களை நிரப்பி வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்