• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சீரடியில் ஓடுதளத்தைவிட்டு விலகி ஓடிய போயிங் விமானம்... விமானிகள் சஸ்பெண்ட்..!

சீரடியில் ஓடுதளத்தைவிட்டு விலகி ஓடிய போயிங் விமானம்... விமானிகள் சஸ்பெண்ட்..!

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பது கூடுதல் பயத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீரடி விமான நிலையத்தில் நேற்று ஓடுதளத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று விலகி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கிய விமானிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி விமான நிலையம் கக்காடி என்னும் கிராமப் பகுதியின் அருகே அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று ஓடுதளத்தில் தரையிறங்க வேண்டிய புள்ளியிலிருந்து 30- 40 மீட்டர் தள்ளிச்சென்று தரையிறங்கியது.

இதனால் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கோ ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாகவே தரையிறக்கப்பட்டனர் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஸ்பைஸ்ஜெட் விமானிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விமான விபத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். பயணிகள் மீட்கப்படுவதற்கு முன்னர் சுமார் 2.30 மணி நேரம் விமானத்தினுள் தவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பது கூடுதல் பயத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. விமானத்தின் பயணிகள் மற்றும் பயண விவரங்கள் எதையும் ஸ்பைஸ்ஜெட் வெளியிடவில்லை.

மேலும் பார்க்க: மூடப்பட்டிருக்கும் பாகிஸ்தான் வான்எல்லை! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.300 கோடி இழப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: