• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாதுகாப்பு காரணத்துக்காக வழங்கப்படவில்லை! பிரக்யா புகாருக்கு விளக்கமளித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

பாதுகாப்பு காரணத்துக்காக வழங்கப்படவில்லை! பிரக்யா புகாருக்கு விளக்கமளித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரக்யா தாகுர் முன் பதிவு செய்திருந்த இருக்கை பாதுகாப்பு காரணங்களுக்கு சக்கரநாற்காலியில் அமர்பவர்களுக்கு வழங்கப்படாது. அது ஒரு இயல்பான நடவடிக்கைதான் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    பா.ஜ.க எம்.பி பிரக்யா தாகுர், டெல்லியிலிருந்து போபாலுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் நேற்று பயணம் செய்துள்ளார். அப்போது விமானத்தில் ஏறிய அவருக்கு, அவர் முன்பதிவு செய்த இருக்கைக்கு பதிலாக வேறு ஒரு இருக்கையில் அமரச் சொல்லி அதற்கான காரணத்தையும் ஊழியர்கள் விளக்கியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த பிரக்யா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும், இதுதொடர்பாக போபால் விமான நிலைய இயக்குநர் ஸ்பைஸ்ஜெட் விமானம் மீது புகார் அளித்துள்ளார். இந்தநிலையில், இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் விளக்கத்தில், ‘டிசம்பர் 21-ம் தேதி ஸ்பைஸ் ஜெட்டின் எஸ்.ஜி 2498 விமானத்தில் டெல்லியிலிருந்து போபால் சென்ற பிரக்யாவுக்கு தனிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. அவர், 1ஏ என்ற இருக்கையை முன்பதிவு செய்திருந்தார். விமானத்துக்கு வரும்போது, அவருடைய சொந்த சக்கரநாற்காலியில் வந்தார். 78 இருக்கைகளைக் கொண்ட அந்த விமானத்தின் முதல் இருக்கை அவசரவழியாக பயன்படுத்தப்படுகிறது.

    அந்த இருக்கை சக்கரநாற்காலியில் வருபவர்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அவர், விமான நிறுவனம் மூலமாக டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை. அதனால், ஊழியர்களுக்கு அவர் சக்கர நாற்காலி கொண்ட பயணி என்று தெரியவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான ஊழியர்களால் பின் இருக்கையில் அமர்வதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அதனை அவர் மறுத்துவிட்டார். பின்னர், பணியிலிருந்து மேலாளராலும் மற்ற ஊழியர்களாலும் வேறொரு இருக்கையில் அமருமாறு கேட்டுகொள்ளப்பட்டார்.

    பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆவணங்களை அவர். அந்த ஆவணங்கள் அவருக்க காண்பிக்கப்பட்டன. பின்னர், மாற்று இருக்கையில் அமர்வதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அசௌகரியத்துக்காக வருந்துகிறோம். ஆனால், பயணிகளின் பாதுகாப்பு எல்லாவற்றையும்விட முக்கியம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Also see:


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: