• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஓடுதளத்திலிருந்து விலகி ஓடிய விமானம்...சீரடி விமான நிலையத்தில் பரபரப்பு!

ஓடுதளத்திலிருந்து விலகி ஓடிய விமானம்...சீரடி விமான நிலையத்தில் பரபரப்பு!

Photo: Reuters

Photo: Reuters

விமானத்தின் பயண விபரம், பயணிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீரடி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று ஓடுதளத்திலிருந்து விலகி ஓடியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி விமான நிலையம் கக்காடி என்னும் கிராமப் பகுதியின் அருகே அமைந்துள்ளது. இன்று மதியம் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று ஓடுதளத்தில் தரையிறங்க வேண்டிய புள்ளியிலிருந்து 30- 40 மீட்டர் தள்ளிச்சென்று தரையிறங்கியது.

அந்த விமானத்தின் பயண விபரம், பயணிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ஆனால், பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீரடி விமானநிலையம், கடந்த 2017-ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் திறக்கப்பட்டது. தற்போது சீரடி விமான நிலையம் மஹாராஷ்டிரா விமான நிலைய வளர்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்விவகாரம் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: