கோடைகாலத்தை முன்னிட்டு, மார்ச் 27ஆம் தேதி முதல் 50 புதிய விமான சேவைகளை தொடங்க இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 27ஆம் தேதி தொடங்கும் இந்த கோடைகால சேவைகள், அக்டோபர் 29ஆம் தேதி வரையிலும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் - கான்பூர், கோரக்பூர் - வாரணாசி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் - தர்மஸாலா (ஹிமாச்சல்) மற்றும் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி - ஷீரடி ஆகிய வழித்தடங்களில் 8 இண்டஸ்ட்ரி பர்ஸ்ட் வகை விமானச் சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எங்களது விமான சேவைகளில் 60 சேவைகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதில், 7 உடனா விமானச் சேவைகள், 8 இண்டஸ்ட்ரி பர்ஸ்ட் விமானச் சேவைகள், புதிய வழித்தடங்களில் விமானச் சேவைகள், ஏற்கனவே இயக்கப்படும் வழித்தடங்களில் கூடுதல் விமானச் சேவைகள் வழங்குதல் ஆகியவை உள்ளடங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டம் என்பது சிறு நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானச் சேவைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிதி சார்ந்த ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, உடான் விமானச் சேவைகளில் பயணக் கட்டணங்களை குறைவாக நிர்ணயிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
அனைத்து நிறுவனங்களின் சேவைகள் அதிகரிப்பு
கோடைகாலத்தில் மக்கள் மிக அதிகமாக உள்நாட்டு சுற்றுலா செல்வதையும், புதிய நிதியாண்டின் துவக்கத்தில் தொழில் ரீதியான பயணங்கள் செல்தையும் கணக்கில் வைத்து, அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுமே அதன் சேவைகளை அதிகரித்து வருகின்றன.
கடந்த சீசனில் வாரம் ஒன்றுக்கு 22,980 உள்நாட்டு விமானச் சேவைகள் இயக்கப்பட்டன நிலையில், இந்த சீசனுக்கு 25,309 விமானச் சேவைகள் வாரந்தோறும் இயக்கப்படுகின்றன.
ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா? மத்திய அரசு பதில் மத்திய அரசு ஒப்புதல்
கோடை காலத்தை முன்னிட்டு உள்நாட்டு விமானச் சேவைகளை அதிகரிக்கும் விமான நிறுவனங்களின் பயணத்திட்ட பட்டியலுக்கு மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகளின் எண்ணிக்கையை காட்டிலும் தற்போது 3.7 சதவீதம் அளவுக்கு சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 10.1 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி வரையில் மொத்தம் 25,309 உள்நாட்டு விமானச் சேவைகளை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கோடை காலத்தில் 24,409 விமானச் சேவைகளும், 2021ஆம் ஆண்டில் 22,980 சேவைகளும் இயக்கப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.