மோதல் காரணமாக விவாகரத்து கேட்டுச் சென்ற காதல் தம்பதியை மனம் விட்டு பேசி ஒற்றுமையாக வாழ கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. தம்பதி இரு நாள்கள் மனம் திறந்து பேசிவிட்டு மீண்டும் நீதிமன்றத்திடம் வருமாறு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதல் செய்த ஜோடி ஒன்று எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தது. இதில் கணவர் அரசுத்துறையிலும், மனைவி ஐடி துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அது ஒரு கட்டத்தில் மோசமடைய இருவரும் ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரிந்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து மனைவியின் புகார் காரணமாக இது வழக்கு, விவகாரத்து என்பது வரை தற்போது நீண்டுள்ளது. பெண்ணின் கணவர் நகையை வைத்துக்கொண்டு தர மாட்டேன் எனக் கூறியதாக, கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனைவி. இந்நிலையில், கணவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அத்துடன் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவெடுத்துள்ளனர். இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கௌசிக் சந்தா விசாரித்துள்ளார். பின்னர் தம்பதி இருவரையும் தனது சேம்பருக்கு அழைத்த நீதிபதி சந்தா, இருவரும் படித்து நல்ல நிலையில் உள்ளவர். இப்படி இருந்து சிறு சிறு விவகாரங்களுக்காக இவ்வாறு முடிவெடுப்பது உகந்தது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மேலும், இருவரும் நல்ல சூழலில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் என அறிவுரை வழங்கி இரு நாள்களுக்குப் பின் வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள இக்கோ பார்க் என்ற இடத்தில் இருவரும் தங்கி பேசவுள்ளனர். வழக்கை நீதிபதி சந்தா கையாண்ட விதம் தனி கவனத்தை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.