Home /News /national /

துணிக்கடைக்குள் நுழைந்த பைக்.! அலறியடித்து ஓடிய பெண்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

துணிக்கடைக்குள் நுழைந்த பைக்.! அலறியடித்து ஓடிய பெண்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கடைக்குள் புகுந்த பைக்

கடைக்குள் புகுந்த பைக்

கடைக்குள் வேகமாக வந்த பைக்கை கண்ட நால்வரும் அலறி அடித்து கொண்டு பதறியபடி எழுந்து விலகுகின்றனர்.

வாகனங்கள் ஒரு பக்கம் பெருகி கொண்டே செல்லும் நிலையில், மறுபக்கம் சாலை விபத்துகளும் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. நிறைய வாகனங்கள் செல்லும் சாலையில் விபத்துகள் ஏற்படுவது என்பது நாம் அதிகம் பார்க்கும் மற்றும் கேள்விப்படும் சம்பவங்களாக இருந்து வருகின்றன. இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் பைக் மூலம் நடந்துள்ள வித்தியாசமான விபத்து ஒன்று காண்போரை திகைக்கவும், பதறவும் வைக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் நல்ல ஸ்பீடில் இருந்த பைக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த துணி கடைக்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வித்தியாசமான விபத்து அடங்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து ஏற்பட என்ன காரணம், விபத்து ஏற்படுத்தியவர் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதை பற்றி பார்க்கலாம். முதலில் சிசிடிவி காட்சியில் விபத்து எப்படி பதிவாகி இருக்கிறது என்பதை தற்போது பார்ப்போம். துணிக்கடை ஒன்றில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் பேசி கொண்டிருக்கின்றனர். இதில் வாடிகையாளர்களுக்கு துணியை எடுத்து காட்டும் வகையில் கவுண்ட்டருக்குள் அமர்ந்தபடி ஒரு பெண் தடுப்புக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் ஆணுடன் பேசி கொண்டிருக்கிறார்.

Also Read:  வாட்ஸ் அப்பில் ஆபாச படம்.. பேக் ஐடியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - நாகர்கோவில் இளைஞரின் லீலை அம்பலம்

அந்த ஆணுக்கு அருகில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் இரு பெண்கள் தங்களுள் பேசி கொண்டிருக்கின்றனர். அபோது திடீரென்று கேட்கும் பலத்த சத்தம் காரணமாக பேசி கொண்டிருக்கும் நால்வரும் சட்டென்று கடைக்கு வெளிப்பக்கம் திரும்பி பார்க்க, அங்கிருக்கும் ஷட்டர் வழியே பைக் ஒன்று சீறி பாய்ந்து இவர்கள் மீது மோதுவது போல வருகிறது. கடைக்குள் வேகமாக வந்த பைக்கை கண்ட நால்வரும் அலறி அடித்து கொண்டு பதறியபடி எழுந்து விலகுகின்றனர். அப்போது இவர்கள் அமர்ந்திருக்கும் கவுண்டருக்கு முன்னால் இருக்கும் கவுண்டர் மீது பைக்கை ஒட்டி வந்த நபர் உரசி தூக்கி எறியப்படுவதில், அப்படியே எகிறி தலைகுப்புற கவுண்டருக்குள் போய் விழுகிறார்.

 கடையில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகாத நிலையில் அவரை பார்க்க தட்டு தடுமாறி எழுந்து நிற்கும் அவர் என்ன நடந்தது என்பது தெரியாதது போல அனைவரையும் உற்று பார்க்கிறார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் கடையில் இருந்தவர்கள் சிறிதும் காயமின்றி தப்பினர். எனினும் பைக்கை ஓட்டி வந்தவருக்கு லேசான அடி ஏற்பட்டது.

Also Read:டேவிட் வார்னர் அடித்த சிக்ஸ்.. குழம்பிய ரசிகர்கள் -இணையத்தில் வைரலாகும் வீடியோ

டேவிட் வார்னர் அடித்த சிக்ஸ்.. குழம்பிய ரசிகர்கள் -இணையத்தில் வைரலாகும் வீடியோ


எதனால் விபத்து.?

இந்த விபத்து தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் Khammam பகுதியில் அமைந்துள்ள ரவிசெட்டு பஜாரில் அமைந்துள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தான் நிகழ்ந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய நபர் குறிப்பிட்ட துணிக்கடைக்கு வெளியே தனது பஜாஜ் பல்ஸர் பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட எத்தனித்த போது பைக்கில் ஏற்பட்ட பிரேக் ஃபெயிலியர் காரணமாக பைக் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். அவரின் கட்டுப்பாட்டை இழந்த பல்ஸர் பைக் நடைபாதையை தாண்டி கடையின் ஷட்டர் வழியே உள்நுழைந்து விபத்து நேர்ந்துள்ளது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பைக் ரைடர் கூறிய தகவல் (பிரேக் ஃபெயிலியர் ) உண்மை என்பதை சோதனைக்கு பிறகு கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Bike, Bike Riders, CCTV Footage, Telangana

அடுத்த செய்தி