விழாக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று துவங்கி விற்று தீர்ந்தன..

விழாக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. இணையதளங்களில் முன்பதிவு நள்ளிரவு முதலே தொடங்கிய நிலையில், ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவு செய்வது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விற்று தீர்ந்தன.

விழாக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று துவங்கி விற்று தீர்ந்தன..
கோப்பு படம்
  • Share this:
வரும் 19-ம் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை இடையே விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல்- மதுரை இடையே திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல்- கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி - ஹவுரா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமைதோறும் காலை 8 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. முரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பது அறமற்ற செயல்சந்திரகாசி- சென்னை இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த ரயில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு சந்திரகாசியில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.


இதற்கான முன்பதிவு ஆன்லைனில் நேற்றிரவும், கவுன்டர் புக்கிங் இன்று காலையும் தொடங்கி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading