மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்னிந்திய வழிபாட்டு தலங்களை தரிசிக்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- ஜனவரி 29-ம் தேதி முதல் தென்னிந்தியாவில் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ள நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஜெயாநகர் மற்றும் பீகாரில் இருந்து ஜனவரி 29ம் தேதி இந்த ரயில் இயக்கப்படும்.
பிப்ரவரி 11-ம்தேதி புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து விடும். ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மல்லிகார்ஜுன உள்பட தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த ரயில் செல்லும்.
இதையும் படிங்க :
நாட்டையே உலுக்கிய Bulli Bai செயலி விவகாரத்தில் இஞ்சினியரிங் மாணவர் கைது
ரயிலில் வருவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்படுத்தி தரும். சைவ உணவு வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 900 செலவு ஆகும். பீகார் - ஜார்க்கண்ட், ராமேஸ்வரம், ஜோதிர்லிங்கா உள்ளிட்ட நகரங்கள் வழியே ரயில் செல்லும்.
சிறப்பு ரயில் செல்லும் பாதையை ரயில்வே போர்டு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் பீகாரின் ஜெயாநகரில் புறப்படும் சிறப்பு ரயில் மதுபானி, தர்பங்கா, சமாஸ்திபூர், முசாபர்பூர், ஹாஜிப்பூர், பாட்னா, பக்தியார்பூர், பீகார் ஷரீப், ராஜ்கிர், கயா வழியே செல்லும். ஜார்க்கண்டில் நுழைந்த பின்னர் கோதர்மா, தன்பாத் வழியே சென்று ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மல்லிகார்ஜுனா, ஜெகன்னாத் புரி, சூர்யா மந்திர், ஜோதிர்லிங் ஆகிய இடங்களுக்கு சென்ற பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும்.
இதையும் படிங்க :
அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்... பரபரப்பு சம்பவம்
ஒட்டுமொத்தாக இந்த ரயிலில் செல்லும் பயணிகள் 13 இரவுகள், 14 பகல்களை கழிப்பார்கள். உணவு, போக்குவரத்து உள்பட மொத்தம் ரூ. 13,230 செலவு ஆகும். இந்த சிறப்பு ரயிலுக்கு EZBD 67 என எண் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர், www.irctctourism.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
இதையும் படிங்க :
அதிகரிக்கும் கொரோனா - பஞ்சாப்பில் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு! உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.