ஹோம் /நியூஸ் /இந்தியா /

எட்டாக்கனியாக மாறிய எலுமிச்சை... விலை குறைய வேண்டி குஜராத்தில் சிறப்பு பூஜை! 

எட்டாக்கனியாக மாறிய எலுமிச்சை... விலை குறைய வேண்டி குஜராத்தில் சிறப்பு பூஜை! 

எலுமிச்சம் பழங்களின் விலை அதிகரிப்பு

எலுமிச்சம் பழங்களின் விலை அதிகரிப்பு

கிடுகிடுவென உயர்ந்து வரும் எலுமிச்சை பழத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டி, வாராணாசியில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கிடுகிடுவென உயர்ந்து வரும் எலுமிச்சை பழத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டி, வாராணாசியில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் எலுமிச்சை பழம் தொடர்பான மீம்ஸ், ஜோக்ஸ், ட்ரோல் வீடியோக்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள எலுமிச்சை பழத்தின் விலை தான். கோடை காலத்தில் ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கனியாக எலுமிச்சை பழம் உள்ளது. லெமன் ரைஸ், லெமன் ஜூஸ் என நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் அதிகம் எலுமிச்சை பயன்படுத்துகின்றனர். ஏன் இந்தியாவைப் பொறுத்தவரை எலுமிச்சை பழம் கோயில் வழிபாடுகளில் முக்கியமான பூஜை பொருளாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல், தக்காளி, கேஸ் சிலிண்டர் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்து வரும் மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சையின் விலை தற்போது 15 ரூபாயும், ஒரு கிலோ 500 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. உலகில் உள்ள எலுமிச்சையில் 17 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. நாடு முழுவதும் 3 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பழத்தோட்டங்களில் எலுமிச்சை வளர்க்கப்படுகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாடு. ஆகிய மாநிலங்கள் எலுமிச்சையை அதிகம் விளைவிக்கின்றன.

இந்நிலையில் எலுமிச்சை அதிகம் விளையும் மாநிலங்களான குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் விளைச்சல் காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் எலுமிச்சை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலும் சொல்லிக் கொள்ளும் படியாக எலுமிச்சை சாகுபடி இல்லாததால், பெட்ரோல் மற்றும் தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சை விலை அதிகரித்து வருகிறது. தற்போது கோடை காலத்தில் வெயில் கொளுத்தி வருவதால், இதுவும் எலுமிச்சை விளைச்சலை பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் எலுமிச்சையின் விலை அதிகரிக்குமோ தவிர குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Also read... பெட்டி, பெட்டியாய் எலுமிச்சை பழம்.. புதுமண தம்பதிக்கு கிடைத்த வித்தியாசமான கிப்ட்..

தமிழகத்தைக் காட்டிலும் வட மாநிலங்களாக மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை விலை விண்ணைப் பிளக்கும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட குஜராத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு பெட்டி, பெட்டியாக எலுமிச்சை பழங்களை பரிசளித்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

தற்போது வாரணாசியில் விண்ணை முட்டும் எலுமிச்சை விலையைக் கட்டுப்படுத்த சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது. சூனியத்தை விரட்டும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றப்பட்டும் ஆதிசக்தி கோயிலில் எலுமிச்சை பழத்தின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. இந்த பூஜையில் 11 எலுமிச்சை பழங்கள் அம்மனுக்கான பூஜையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பூஜையை ஏற்பாடு செய்த ஹரிஷ் மிஸ்ரா கூறுகையில் `தந்திர பூஜைக்கு' விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி உள்ளது என்றும், இன்னும் சில நாட்களில் எலுமிச்சையின் விலை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தும் அனைவரது நன்மைக்காகவும் இந்த பூஜை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lemon