HOME»NEWS»NATIONAL»special programs are happen in republic day celebrations about pallava period sculptures srs

டெல்லி குடியரசு தின விழாவில் பல்லவர் கால சிற்பங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் கலைநிகழ்ச்சிகள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி குடியரசு தின விழாவில் பல்லவர் கால சிற்பங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் கலைநிகழ்ச்சிகள்!
கலைநிகழ்ச்சி
  • Share this:

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில், தமிழகத்தின் சார்பில் பல்லவர்களின் சிற்பங்களை எடுத்துரைக்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் கடந்த சில நாள்களாக பாதுகாப்பு படை வீரர்கள் கடும் பனிமூட்டத்துக்கு மத்தியில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை முழு அணிவகுப்பு ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அணிவகுப்பில் பங்கேற்கும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தமிழகத்தின் சார்பில் பல்லவர் கால சிற்பங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன. சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில், இடம்பெற்றுள்ள சிற்பங்கள் அடங்கிய வாகனம் அணிவகுப்பில் பங்கேற்கிறது.

அத்துடன் தமிழகத்தை சேர்ந்த நாதஸ்வர, தவில் கலைஞர்களின் பின்னணி இசையில், பரதநாட்டிய கலைஞர்கள் 4 பேர் நடனம் ஆடுகின்றனர். இதற்காக பரத நாட்டிய கலைஞர்கள் பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. குடியரசு தினத்தன்று சென்னை மெரினாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் குடியரசு தின விழாவை காண நேரில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Published by:Ram Sankar
First published: