நேற்றைய ஹீரோவான மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்புகள் என்ன?
India Strike Back | சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதாலேயே பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக மிராஜ் 2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.

- News18
- Last Updated: February 27, 2019, 2:17 PM IST
தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து சாதனை படைத்துள்ள மிராஜ் 2000 வகை போர் விமானங்கள், 1999-ம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் முக்கிய பங்காற்றியுள்ளன.
மிராஜ் 2000 வகை விமானங்களின் சிறப்புகள்
1. ஒற்றை என்ஜின் கொண்ட 4-ம் தலைமுறை போர் விமானமான மிராஜ் 2000-ஐ, ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸின் தஸால்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. 2. அமெரிக்காவிடமிருந்து எஃப்16 வகை விமானங்களை பாகிஸ்தான் வாங்கியதைத் தொடர்ந்து, மிராஜ் 2000 வகை விமானங்களுக்கு 1982-ம் ஆண்டில் இந்தியா ஆர்டர் கொடுத்தது. அப்போது, 36 விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.
3. 1999-ம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் மிராஜ் 2000 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டன. அப்போது 514 முறை பறந்து சென்று 55,000 கிலோ அளவுக்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி எதிரி படையினரின் பதுங்கு குழிகளை அழித்தன.
4. கார்கில் போரில் அற்புதமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, மிராஜ் வகையைச் சேர்ந்த மேலும் 10 விமானங்களை வாங்க 2004-ம் ஆண்டில் இந்திய ஒப்பந்தம் மேற்கொண்டது.5. 2011-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மிராஜ் 5-எம்கே வகையைச் சேர்ந்த விமானங்களுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
6. மிராஜ் போர் விமானங்கள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றவை. பழமையான மற்றும் நவீன வகை ஆயுதங்களின் இலக்குகளை நோக்கி வீசும்.
7. இந்த விமானம் இந்தியாவின் மற்ற போர் விமானங்களைவிட இலகு ரகமானது. இந்தியாவின் அதிநவீன போர் விமானமான சுகோய் எஸ்யு-30எம்கேஐ-வைவிட அதிநவீனமானது. அதிகபட்சமாக மணிக்கு 2,336 கிலோமீட்டர் வேகத்திலும், குறைந்தபட்சம் 2,120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும்.
8. இந்த விமானம் வானிலிருந்து வானில் உள்ள இலக்கை நோக்கியும், வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை நோக்கியும் ஏவுகணைகளை செலுத்தும் திறன் பெற்றது. லேசர் அடிப்படையிலான குண்டுகளையும் சுமந்து செல்லும். இவ்வளவு சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதாலேயே பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக மிராஜ் 2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.
Also see... துல்லிய தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்பு அ ம்சங்கள்
மிராஜ் 2000 வகை விமானங்களின் சிறப்புகள்
1. ஒற்றை என்ஜின் கொண்ட 4-ம் தலைமுறை போர் விமானமான மிராஜ் 2000-ஐ, ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸின் தஸால்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.