LIVE | ப.சிதம்பரத்திற்கு ஜாமின் மறுப்பு... திங்கட்கிழமை வரை சிபிஐ காவல் - நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான உடனடி செய்திகள் நேரலையாக...

  • News18
  • | August 22, 2019, 19:54 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:34 (IST)

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாகத்துறையினர் கைது நடவடிக்கைக்கு எதிரான ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    18:58 (IST)

    சட்டப்படி ப.சிதம்பரத்திற்கு மருத்துவ சோதனை நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

    18:46 (IST)

    விசாரணைக்காக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் மீண்டும் அழைத்து செல்லப்படுகிறார். ப.சிதம்பரத்தை குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடங்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    18:44 (IST)
    18:39 (IST)

    ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் திங்கட் கிழமை வரை சிபிஐ காவல் - டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    17:57 (IST)

    நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிப்பு

    17:54 (IST)

    சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

    17:47 (IST)

    சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 1 1/2 மணிநேரம் இருதரப்பு வாதங்கள் நடந்துள்ளது.

    17:35 (IST)

    கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங்வியின் வாதம் மாஸ்டர் கிளாஸ் ஆக இருந்தது. இதனை வீடியோ பதிவு செய்தால், சட்ட மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் - கார்த்தி சிதம்பரம்

    17:28 (IST)

    விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினோம் - சிதம்பரம் தரப்பு