Home /News /national /

கொளுத்தும் கத்திரி வெயிலில் இருந்து வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்..

கொளுத்தும் கத்திரி வெயிலில் இருந்து வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்..

கொளுத்தும் கத்திரி வெயிலில் இருந்து வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்..

கொளுத்தும் கத்திரி வெயிலில் இருந்து வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்..

summer heat | புதுச்சேரியில் கொளுத்தும் வெயிலில் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கத்திரி வெயில் இன்று முதல் துவங்கியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி  வரும் நிலையில் புதுச்சேரியில் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் வேளையில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கொடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் சுற்றுலா தளங்கள், தெருக்கள், வணிக நிறுவனங்களிலும் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி வனத்துறையில் பாதுகாக்கப்படும் வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெயில் கொளுத்தி வரும் நிலையில் மலைப்பாம்புகள், உடலை குளுமையாக வைத்துக்கொள்ள தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் நிரம்பியுள்ள தண்ணீரில் பாம்புகள் ஊர்ந்து சென்று தங்கள் உடலை குளிர்வித்துக்கொள்கின்றன.

    இதையும்  படிங்க: மத்தியப் பிரதேசத்தில் பசுக்கொலை சந்தேகத்தின் பேரில் பழங்குடியினர் இருவர் அடித்துக் கொலை

    மேலும் தரைப்பகுதியிலும் ஊழியர்கள் அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துள்ளனர். இதனால் ஓரளவுக்கு வெப்பதாக்குதல் குறைந்துள்ளது. வனத்துறையில் பாதுகாக்கப்படும் நட்சத்திர ஆமை குஞ்சுளும் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் தொட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.



    அதனை சுற்றி கூழாங்கற்களை அடுக்கி இயற்கையான சூழலை அமைத்துக்கொடுத்துள்ளனர். அந்த ஆமை குஞ்சுகள் ஓய்வெடுக்க வசதியாக மண்பானை கூடுவசதியும் செய்யப்பட்டுள்ளது. மதிய வேளையில் இந்த ஆமை குஞ்சுகள் பெரும்பாலும் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே நீந்தி விளையாடுகின்றன. வனத்துறையில் உள்ள மான்களுக்கு அவ்வப்போது தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது. உணவாக உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய பழ வகைகள் தினமும் அளிக்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heat Wave, Snake, Summer Heat

    அடுத்த செய்தி