கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா!

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா!
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்
  • News18
  • Last Updated: July 29, 2019, 12:49 PM IST
  • Share this:
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். 

குமாரசாமி அரசு கவிழ்ந்த பின்னர், எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார். இன்று சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னர் சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ் குமார் மீது எடியூரப்பா அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பதவி விலகியுள்ளார்.

துணை சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை, ரமேஷ் குமார் அளித்தார். முன்னதாக, சட்டப்பேரவை கூடியதும், “நம்பிக்கை வாக்கெடுப்பை சீக்கிரம் நடத்த ஒத்துழைப்பு அளியுங்கள். ஜெய்பால் ரெட்டியின் (நேற்று காலமான முன்னாள் மத்திய அமைச்சர்) இறுதிச்சடங்குக்காக செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading