கலக எம்.எல்.ஏக்களுக்கு நாளை காலை 11 மணிவரை அவகாசம்! கர்நாடகா அமைச்சர் எச்சரிக்கை

உங்களை தகுதி நீக்கம் செய்யப்படமாட்டீர்கள். நீங்கள் அமைச்சராகலாம் என்று கலக எம்.எல்.ஏக்களை பா.ஜ.க சமரசம் செய்ய முயற்சி செய்கிறது.

news18
Updated: July 22, 2019, 10:51 PM IST
கலக எம்.எல்.ஏக்களுக்கு நாளை காலை 11 மணிவரை அவகாசம்! கர்நாடகா அமைச்சர் எச்சரிக்கை
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் துணை முதலமைச்சர் பரமேஷ்வரா
news18
Updated: July 22, 2019, 10:51 PM IST
ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களுக்கு நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ் குமார் அவகாசம் அளித்துள்ளார் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜீனாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் குமாரசாமி ராஜீனாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. ஆனால், குமாராசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்திவருகிறார். இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அப்படி நடத்தவில்லையென்றால் நான் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சர் சிவகுமார்இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், ‘ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களுக்கு நாளை காலை 11 மணி வரை அவகாசம் அளித்து சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். உங்களை தகுதி நீக்கம் செய்யப்படமாட்டீர்கள். நீங்கள் அமைச்சராகலாம் என்று கலக எம்.எல்.ஏக்களை பா.ஜ.க சமரசம் செய்ய முயற்சி செய்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நீங்கள் ஒருமுறை தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நீங்கள் மீண்டும் உறுப்பினராக முடியாது’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, ‘நான், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டேன் என்று எனக்கு தகவல் வந்தது. யார் முதலமைச்சராக காத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கையெழுத்தை யாரோ சட்டவிரோதமாக போட்டுள்ளார்கள். அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்த அளவு கீழ்தரமாக செயல்படுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்தார். இருப்பினும், இதுவரையில் சட்டபேரவை ஒத்திவைக்கப்படவில்லை.

Also see:

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...