Home /News /national /

எதிர்கட்சிகளின் வியூகம்.. பாஜகவுக்கு சாதகம்.. மீண்டும் 2017 தேர்தல் முடிவு எதிரொலிக்குமா?

எதிர்கட்சிகளின் வியூகம்.. பாஜகவுக்கு சாதகம்.. மீண்டும் 2017 தேர்தல் முடிவு எதிரொலிக்குமா?

Yogi Adityanath

Yogi Adityanath

SP-RLD, BSP கட்சிகள் 7 இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்குகளை இரு கூட்டணியும் பிரித்ததால்,  அந்த 7 தொகுதிகளிலுமே பாஜக தான் வெற்றி பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தில் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள், பாஜகவுக்கு அனுகூலமாக இருக்கக் கூடும் என்பதால் அங்கு 2017 தேர்தல் முடிவே மீண்டும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி - ராஷ்டிரிய லோக் தளம் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் இணைந்து ஒரே கூட்டணியாக போட்டியிட்ட சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இம்முறை தனித்தனியாக களம் காணுகின்றன. கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பாஜக 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 47 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

    முதற்கட்ட தேர்தல் (பிப்ரவரி 10 வாக்குப்பதிவு) அடிப்படையில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள 58 தொகுதிகளில் சமாஜ்வாதி கூட்டணி 13 இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ள்ளது. இதே போல பகுஜன் சமாஜ் 17 இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    Also read:  பாகிஸ்தான் சிதைந்துவிடும், இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை - தாலிபான்கள் கடும் தாக்கு

    பிப்ரவரி 10ம் தேதி நடைபெறவிருக்கும் முதல்கட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 22% இடங்களை சமாஜ்வாதி கட்சி இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு அளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் பங்கு 29% ஆக இருக்கிறது. அதே நேரத்தில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட 109 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமிய வேட்பாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.

    சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 8 தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. எதிர்கட்சிகளின் இந்த வியூகம் பாஜகவுக்கே சாதகமாக இருக்கக் கூடும் என்பது கடந்த தேர்தல் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் SP-RLD, BSP கட்சிகள் 7 இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்குகளை இரு கூட்டணியும் பிரித்ததால்,  அந்த 7 தொகுதிகளிலுமே பாஜக தான் வெற்றி பெற்றது.

    Also read:  ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..

    Thana Bhawan, Siwalkhas, Meerut, Meerut South, Dhulana, Bulandshaher, Koil, Aligarh ஆகிய 8 தொகுதிகளுமே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும்.

    தற்போதும் எதிர்கட்சிகளின் வியூகம் பாஜகவுக்கு சாதகமாக அமையக் கூடும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

    Also read:  புஷ்பா படம் பார்த்த உத்வேகத்தில் கொடூர கொலை சம்பவம்.. சீரழிந்த சிறுவர்கள்..

    மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் ஆதரவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிகம் உள்ளது. அதே நேரத்தில் 2013ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கும், ஜாட்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்துக்கு பின்னர் கணிசமான இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - அமன் ஷர்மா
    Published by:Arun
    First published:

    Tags: Akhilesh Yadav, BJP, Election 2022

    அடுத்த செய்தி