• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தந்தைக்கு கல்தா; அஸாம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி!

தந்தைக்கு கல்தா; அஸாம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி!

அகிலேஷ் யாதவ் - முலாயம் சிங் யாதவ்

அகிலேஷ் யாதவ் - முலாயம் சிங் யாதவ்

தேர்தல் பிரசாரத்திற்காக நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டுள்ள சமாஜ்வாதி கட்சி முலாயம் சிங் யாதவின் பெயரை அந்த பட்டியலில் வெளியிடவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,  தனது தந்தை முலாயம் சிங் யாதவின் தொகுதியான அஸாம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக-வுக்கு செக் வைக்கும் நோக்கத்துடன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ் வாதி கட்சி கூட்டணி வைத்தது.
    உத்தரப்பிரதேசத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அஸாம்கர் தொகுதியில் போட்டியிடுவதாக கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
    மேலும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அஸாம் கான், பாஜகவின் கோட்டையாக உள்ள ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாஜகவின் சிட்டிங் எம்.பியான டாக்டர் நேபாள் சிங், போட்டியிடும் ராம்பூர் தொகுதியில், அஸாம் கான் போட்டியிடுவது, பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    தேர்தல் பிரசாரத்திற்காக நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டுள்ள சமாஜ்வாதி கட்சி முலாயம் சிங் யாதவின் பெயரை அந்தப் பட்டியலில் வெளியிடவில்லை. ஆனாலும், முலாயம் சிங் மணிபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    Also See..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Mari S
    First published: