வாரணாசியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரரை மோடிக்கு எதிராக களமிறக்கும் சமாஜ்வாடி!

இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான் கடந்த முறையும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

news18
Updated: April 29, 2019, 4:26 PM IST
வாரணாசியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரரை மோடிக்கு எதிராக களமிறக்கும் சமாஜ்வாடி!
தேஜ் பஹதூர்
news18
Updated: April 29, 2019, 4:26 PM IST
வாராணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு எதிராக பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் தேஜ் பகதூரை வேட்பாளராக சமாஜ்வாடி அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான் கடந்த முறையும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் ஷாலினி யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.


இந்தநிலையில், சமாஜ்வாடி வாரணாசி தொகுதியின் வேட்பாளரை மாற்றியுள்ளது. இந்த வாரணாசி தொகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் தேஜ் பஹதூர்  சமாஜ்வாடி கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2017-ம் ஆண்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவு சரியாக வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி ராணுவ வீரர் தேஜ்பஹதூர் வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தேஜ்பஹதூர் ராணுவத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, அவரை மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளராக அறிவித்துள்ளது.
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...