Home /News /national /

காங்கிரஸ், பாஜக-வுக்கு இடமில்லை- 2019 தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி!

காங்கிரஸ், பாஜக-வுக்கு இடமில்லை- 2019 தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை விடுத்து சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
நாட்டின் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளைத் தவிர்த்து சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தற்போது கூட்டணி அமைத்துள்ளன.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் பேசுகையில், “அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி முடிவாகி உள்ளது. இந்தக் கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் இணைந்திருப்பார்” என்று கூறினார்.

கூட்டணியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் லோக் தளம் கட்சிகளுடன் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜ்பர் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசில் அமைச்சராக உள்ளார். ஆனால், தொடர்ந்து சொந்தக் கட்சியினாராலே பல விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார் ராஜ்பர்.

தற்போதைய சூழலில் காங்கிரஸ் ஆளும் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் இக்கூட்டணி வேட்பாளர்களை முன்னிறுத்தப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

இக்கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியின் தீபக் சிங் கூறுகையில், “பாஜக-வுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைத்து வீழ்த்துவதே காங்கிரஸின் நோக்கம். ஆனால், அரசியிலில் நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை” என்றார்.

உத்தரபிரதேச மாநில அரசியலில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது முழு கவனத்தையும் விரைவில் உத்தரபிரதேசத்தின் மீது செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.

Also See... உலக சினிமாவில் 2.O திரைப்படம் பல விருதுகளை பெறும்: ரசிகர்கள்
Published by:Rahini M
First published:

Tags: Bahujan Samaj Party, Samajwadi party

அடுத்த செய்தி