முகப்பு /செய்தி /இந்தியா / தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி துவங்கும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி துவங்கும்: வானிலை ஆய்வு மையம்

மழைக்காலம்

மழைக்காலம்

தமிழகத்தில் ஜூன் 4ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இந்திய துணைகண்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை இந்திய துணைக்கண்டத்தில் கேரளாவிலிருந்து தான் துவங்கும், அதன் அடிப்படையில் கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவடையும், அதற்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் இயல்பாக இருக்கும். சராசரியாக 88 சென்ட்டிமீட்டர் மழை பொழிவு இருக்கும். துவங்கிய முதல் வாரத்தில் தென் இந்திய பகுதிகள் முழுவதும் தென் மேற்கு பருவமழை சென்றடையும்.

பின்னர் சிறிது தொய்வு நிலையை அடைந்து மீண்டும் இந்தியா முழுவதும் சென்றடையும். தென் மேற்கு பருவமழையை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும்

வெப்பநிலை வேறுபாடு சமநிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


src="https://www.youtube.com/embed/WVjUg_PJYXo" width="100%" height="360">

First published:

Tags: Indian meteorological board, North East Monsoon