Home /News /national /

இந்தியாவில் இந்த ஆண்டு முன்னதாகவே துவங்குகிறது தென் மேற்கு பருவமழை!

இந்தியாவில் இந்த ஆண்டு முன்னதாகவே துவங்குகிறது தென் மேற்கு பருவமழை!

கன மழை

கன மழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிசாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அந்தமான் பகுதிகளில் வருகின்ற 13-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். மேலும் அந்தமானில் வருகின்ற 16-ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதக சூழல் நிலவுகிறது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை புதுக்கோட்டை, ராமநாதபுரம் சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வெப்ப நிலையைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி, கரூர், சேலம் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் இயல்பை விட வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

    இதன்காரணமாக இந்த மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 11.30 முதல் 03.30 வரை வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    தென்மேற்கு பருவமழை வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது முன்னதாக துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக வருகின்ற 13ஆம் தேதி அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதே போல் பதினாறாம் தேதி தென்மேற்கு பருவமழை அந்தமானில் துவங்குவதற்கான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ்,
    குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிசாகும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    குமரிக்கடல், மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Also see... 






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Indian meteorological department, Southwest monsoon

    அடுத்த செய்தி