லட்சத்தீவுகள், அரபிக்கடலுக்கு மத்தியில் உருவாகியுள்ள குறைந்த காற்றதழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையும் எனவும், வடமேற்கு திசை நோக்கி நகரும் இந்த காற்றதழுத்த தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் கேரளவில் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை விடிய விடிய மிதமான மழை பெய்தது.
நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தூத்துக்குடியில் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று காலை திடீரென மிதமான மழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை அதிகரித்து கனமழையாக பெய்தது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாரல் மழை பெய்தது. விரைவில் சீசன் தொடங்கி விடும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போன்று தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில் அடுத்த 42 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தென்மேற்கு பருவமழையால், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.