தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை... வட மாநிலங்களில் கனமழை!

தமிழகத்தைப் பொருத்தவரை, நாகை, தஞ்சை, திருவாரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை... வட மாநிலங்களில் கனமழை!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 9:11 AM IST
  • Share this:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கியது.

மகாராஷ்டிராவில் 5 நாட்களாக பெய்த கனமழை 


இது படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மலாத் பகுதியில் சுவர் இடிந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-க உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் லேசான மழை

இந்நிலையில், வடமாநிலங்களில் நேற்று கனமழை பெய்தது. தலைநகர் டெல்லியில் லேசான மழை பெய்தது. இதனால், 16 நாட்களாக வாட்டிவதைத்த வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குர்காவோன், பரிதாபாத், நொய்டா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.மத்தியப்பிரதேசத்தில் கனமழை

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தமோ மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 18 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் கரைபுரண்டோடிய வெள்ளபெருக்கு

ராஜஸ்தானில் பிரதாப்கர், ஆஸ்புர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரே நாளில் 14 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பரன் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

அதனை கடக்க முயன்ற ட்ராக்டர் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. இதையடுதது அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் ட்ராக்டரையும், அதில் இருந்த 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த மிதமான மழை 

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்டு, சத்தீஷ்கர் மாநிலங்களிலும் மிதமான மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் லேசான மழை பெய்யும்

தமிழகத்தைப் பொருத்தவரை, நாகை, தஞ்சை, திருவாரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see... கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்து பெண்கள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்