தென்மேற்கு பருவமழை: மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலங்கானா மழை

மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை 6 பேர் உயிரிழந்தனர்.

  இந்நிலையில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. வடாலா, சியோன் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்தது. செம்பூர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகனங்கள் நீரில் மிதந்தபடி சென்றன. மெரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

  தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததாகவும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரில் கனமழை பெய்தது. இதனிடையே, உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை மேகப்பெருவெடிப்புடன் கூடிய பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கங்கிராடி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். இதேபோல, மண்டோ கிராமத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: