தென்மேற்கு பருவமழை தொடங்கியது - அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

மாதிரிப் படம் (PTI)

 • News18
 • Last Updated :
 • Share this:
  தென்மேற்குப்பருவ மழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முடிவடையாததால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தமான் மற்றும் அரபிக்கடலில் கடந்த ஒன்றாம் தேதி மழைப்பொழிவு தொடங்கியது. அப்போதிருந்தே கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

  கேரளாவின் கடலோர பகுதிகளில் தற்போது மழை தொடங்கியுள்ளதாகவும், படிப்படியாக மழை கிழக்கு நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலான மழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த சில மாதங்களாக கோடை வெயிலில் தமிழகம் வறண்டு கிடக்கும் நிலையில், தென்மேற்கு பருவமழையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  Published by:Sankar
  First published: