தென்மேற்கு பருவமழை - மகிழ்ச்சியான செய்தி சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த வருட தென் மேற்கு பருவமழை 102 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை - மகிழ்ச்சியான செய்தி சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • Share this:
நாடெங்கும் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் தொடங்க உள்ளது. குறிப்பாக கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நேற்று கேரளாவில் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. தொடக்க நாளிலேயே கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு Yellow alert கொடுக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை குறித்த கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புவியறிவியல் மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இந்த வருடம் பருவமழை சாதாரண அளவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது அல்லது நீண்ட கால சராசரியில் 100 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய நீண்டகால அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் பருவமழை நீண்டகால சராசரியில் இருந்து 102 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில், அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை, வடமேற்கு இந்தியாவில் மழையளவு 107 %, மத்திய இந்தியாவில் 103 %, தெற்கு இந்தியாவில் 102 %, வடகிழக்கு இந்தியாவில் 96% இந்த ஆண்டு மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஒட்டு மொத்த இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, 2020 ஆம் ஆண்டு இயல்பை விட அதிகரித்து 102 சதவீதம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...தொடங்கியது தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading